'எனக்கில்லை recession' என்கிறது Twitter.
Twitter-ஐ பயன்படுத்தும் அமெரிக்கர்கள், கடந்த மார்ச் 2009-ல் மட்டும் சுமார் 130 சதவீதம் அதிகரித்துள்ளதாக, Comscore.com என்ற இன்டெர்நெட் தகவல் வழங்கும் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.கவனியுங்கள். இந்த வளர்ச்சி ஒரு வருடத்திற்கு இல்லை. ஒரு மாதத்திற்கு!!ஒரே மாதத்தில் 50 லட்சம் (5 மில்லியன்) அமெரிக்கர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இப்போது மொத்தம் 93 லட்சம் (9.3 மில்லியன்) பேர், அமெரிக்காவில் Twitter பயன்படுத்துகிறார்கள்.
சிறுசுங்கதான் Twitter மேலே பைத்தியமா இருக்குன்னு நெனச்சா, நடுசுங்களும் (middle aged), பெருசுங்களும்கூட வயசு வித்தியாசம் பார்க்காமல் Twitter-லே சொகுசு பண்ணித் திரியுதுங்க.இதில் நடுசுங்கதான் மெஜாரிட்டி.டுவிட்டரைப் பற்றி வரும் செய்திகளை பார்க்காமல், கேட்காமல், படிக்காமல் உங்களால் இப்போது ஒரு நாளாவது ஓட்ட முடிகிறதா என்ன? யோசித்துப் பாருங்கள்.Twitter-ஐ எத்தனை முறை search செய்கிறார்கள் என்று பார்த்தால், அதிலும் மார்ச் 2009-ல் 130 சதவீதம் jump. சொல்வது compete.com.கூகிள் Twitter-ஐ வாங்க இன்னும் delay செய்தால், யானை விலை, குதிரை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டி இருக்கும்.Related Post:ட்விட்டரின் வயது இன்று ”3”. நன்று !!!
0 Comments:
Post a Comment